புதிய கடற்பாசி இனங்கள் - அல்லோகிராஃபா எஃபுசோசோரெடிகா
July 25 , 2025 2 days 31 0
இந்திய அறிவியலாளர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து முன்னர் அறியப் படாத அல்லோகிராஃபா எஃபுசோசோரெடிகா எனப்படும் ஒரு வகையான கடற்பாசி / லைக்கன் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வை புனேவில் உள்ள MACS-அகர்கர் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டது.
மூலக்கூறு தரவுகளைக் கொண்டு கண்டறியப்பட்ட முதல் இந்திய அல்லோகிராஃபா இனத்தை இது குறிக்கிறது.
இது இந்தியாவில் பதிவான 53வது இனமாகவும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பதிவான 22வது இனமாகவும் உள்ளது.
இது எஃபியூஸ் சோரேடியா (ஒரு வகை பாலின வேறுபாடற்ற இனப்பெருக்க அமைப்பு) மற்றும் ஓர் அரிய வேதியியல், அதனை ஒத்த இனங்களிலிருந்து வேறுபடுத்துகின்ற நார்ஸ்டிக்டிக் அமிலத்தால் வகைப்படுத்தப்படுகிறது.
கடற்பாசியினத்தின் ஒளிச்சேர்க்கை உயிர்த்தொகுதி இணையானது ஒரு ட்ரென்டெபோலியா இனமாக அடையாளம் காணப்பட்டது என்பதோடு இது வெப்ப மண்டல கூட்டுவாழ்வுகளில் பாசி இனங்களின் பன்முகத் தன்மை பற்றிய தகவலை வளப் படுத்துகிறது.
உருவவியல் ரீதியாக, இது கிராஃபிஸ் கிளாசெசென்ஸை பெருமளவில் ஒத்திருக்கிறது என்றாலும் இது அல்லோகிராஃபா சாந்தோஸ்போராவுடன் மரபணு ரீதியாக இணைக்கப் பட்டுள்ளது.
கடற்பாசிகள் ஓர் உயிரினம் மட்டுமல்ல, மிக நெருக்கமான கூட்டுவாழ்வில் வாழும் இரண்டு (சில நேரங்களில் அதற்கு மேற்பட்டவை):
அமைப்பு மற்றும் பாதுகாப்பை வழங்கும் ஒரு பூஞ்சை மற்றும்
சூரிய ஒளியைக் கொண்டு உணவை உருவாக்கும் ஒரு ஒளிச்சேர்க்கைக் காரணி (பொதுவாக ஒரு பச்சை ஆல்கா அல்லது சையனோபாக்டீரியம்) ஆகும்.