2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் புகையிலை மற்றும் பான் மசாலா மீதான புதிய கலால் வரி மற்றும் வீத வரி ஆகியவற்றை இந்திய அரசு அறிவித்துள்ளது.
புகையிலை மற்றும் பான் மசாலா மீதான முந்தைய இழப்பீட்டு வீத வரி திரும்பப் பெறப் பட்டுள்ளது.
புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு இனி கூடுதல் கலால் வரி விதிக்கப் படும்.
பான் மசாலா மீது சுகாதார மற்றும் தேசியப் பாதுகாப்பு வரி விதிக்கப்படும்.
சிகரெட், புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (GST) கீழ் 40 சதவீத வரி விதிக்கப்படும்.
பீடிகளுக்குத் தொடர்ந்து 18 சதவீதம் என்ற குறைந்த GST விகிதம் விதிக்கப்படும்.