TNPSC Thervupettagam

புதிய கல்வெட்டுகள் - ஊட்டத்தூர்

May 20 , 2025 16 hrs 0 min 67 0
  • தமிழக மாநிலத் தொல்பொருள் துறையானது, திருச்சியின் ஊட்டத்தூர் கிராமத்தில் உள்ள சுத்தரத்தனேஸ்வரர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட புதியக் கல்வெட்டுகளில் உள்ள தகவல்களின் பொருள் கண்டுணர்ந்துள்ளது.
  • இந்தக் கோயில் ஆனது விக்ரமச் சோழனின் (1118-1135) காலத்தைச் சேர்ந்தது என்று நம்பப் பட்டது.
  • ஆனால் இந்தப் புதியக் கல்வெட்டுகள், முதலாம் பராந்தக சோழனின் (907-955) ஆட்சிக் காலத்திலிருந்தே இந்தக் கோயில் இருப்பதாகக் காட்டுகின்றன.
  • ஓர் ஆய்வின் போது, இக்கோயிலில் 12 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
  • முழுமையாகப் படிக்கக் கூடிய வகையில் அமைந்த ஐந்து கல்வெட்டுகளில், நான்கு சோழர்களின் காலத்திலும், ஒன்று பாண்டியர்களின் காலத்திலும் பொறிக்கப்பட்டவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்