TNPSC Thervupettagam

புதிய காலநிலை இலக்குகள் – இந்தியா

May 3 , 2026 14 hrs 0 min 22 0
  • பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு (UNFCCC) 2031–35 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDCs) இந்தியா சமர்ப்பித்து உள்ளது.
  • 2035 ஆம் ஆண்டிற்குள் புதைபடிவமற்ற எரிபொருட்களிலிருந்து 60% மின்சாரத் திறனைப் பெறுதல் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு தீவிரத்தை 47% (2005 நிலைகளிலிருந்து) குறைத்தல் ஆகியவை இந்த இலக்குகளில் அடங்கும்.
  • காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரிப்பதன் மூலம் 3.5 முதல் 4 பில்லியன் டன் CO (கார்பன் டை ஆக்சைடு) உறிஞ்சு திறனை உருவாக்க இந்தியா இலக்கு வைத்துள்ளது.
  • இந்த இலக்குகளை அடைவது வளர்ந்த நாடுகளின் நிதி ஆதரவு, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றைச் சார்ந்துள்ளது என அது வலியுறுத்தியது.
  • இந்தியா ஏற்கனவே 52.5% புதைபடிவமற்ற எரிபொருள் திறனை அடைந்துள்ளதுடன், உமிழ்வு தீவிரத்தை 36% (2005 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை) குறைத்து உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்