TNPSC Thervupettagam

புதிய நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள்

May 25 , 2026 14 hrs 0 min 44 0
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான துறைகள் சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக மேதா விஷ்ராம் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இக்குழு அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான அரசின் கொள்கைகள், நிதி ஒதுக்கீடுகள், ஆண்டு அறிக்கைகள் மற்றும் மசோதாக்களை ஆய்வு செய்கிறது.
  • துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுக்கள், அமைச்சகங்கள் மற்றும் சட்ட முன்வரைவுகளை விரிவாக ஆய்வு செய்வதற்கு நாடாளுமன்றத்திற்கு உதவுகின்றன.
  • இக்குழுக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்டு உள்ளதோடு இவை நிரந்தர நாடாளுமன்றக் குழுக்களாகச் செயல் படுகின்றன.
  • பெருநிறுவனச் சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026-க்கான கூட்டுக் குழுவின் தலைவராக சுதீர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பெருநிறுவனச் சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் படுவதற்கு முன்பாக, அதன் விதிகளைப் படித்து ஆய்வு செய்வதற்காக இந்தக் கூட்டுக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
  • இக்குழுவில் பைஜயந்த் பாண்டா, தேஜஸ்வி சூர்யா, டிம்பிள் யாதவ், மஹுவா மொய்த்ரா மற்றும் சுப்ரியா சுலே போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்று உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்