TNPSC Thervupettagam

புதிய சதுப்புநில மண்டலம்

September 17 , 2025 16 hrs 0 min 50 0
  • தமிழ்நாடு வனத்துறையானது, அடையாறு முகத்துவாரத்தில் உள்ள அடையாறுத் தீவில் ஒரு புதிய சதுப்புநில மண்டலத்தினை உருவாக்கியுள்ளது.
  • சதுப்புநில இனங்களில் ரைசோபோரா முக்ரோனாட்டா, ரைசோபோரா அபிகுலாட்டா, அவிசினியா மெரினா மற்றும் எக்ஸ்கோகாரியா அகல்லோச்சா ஆகியவை நடப்பட்டன.
  • சதுப்பு நிலங்களில் செடிகளை நடுவதற்கு முன்பு அயல் ஊடுருவல் இனமான ப்ரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா அகற்றப்பட்டது.
  • தீவு முழுவதும் மூன்று முக்கிய கால்வாய்கள் மற்றும் 62 நீர் விநியோகக் கால்வாய்கள் கொண்ட ஒரு மீன் முள் எலும்பு அடிப்படையிலான நீர் விநியோக அமைப்பு உருவாக்கப் பட்டது.
  • நீர் ஓட்டம் மற்றும் சதுப்புநில வளர்ச்சியை ஆதரிக்க மீன் முள் எலும்பு அடிப்படையிலான வடிகால் அமைப்பு கட்டப்பட்டது.
  • அடையாறு முகத்துவாரத்தில் கடல் அரிப்பைக் குறைத்து பல்லுயிர்ப் பெருக்கத்தினை ஆதரிப்பதை இந்தப் பசுமை மண்டலம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்