இந்திய அரசு ஆனது ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டத்தின் (EPM) கீழ் இரண்டு சோதனைத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டங்கள் ஆனது EPM திட்டத்தின் நிதி ஆதரவுப் பிரிவான நிர்யாத் புரோட் சஹான் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
வட்டி மானியத் திட்டம் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதிக் கடனில் 2.75% வட்டி ஆதரவை வழங்குகிறது.
பிணையக் கடன் ஆதரவுத் திட்டம் ஆனது குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை (CGTMSE) மூலம் 10 கோடி ரூபாய் வரை கடன் உத்தரவாதங்களை வழங்குகிறது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட EPM ஆனது, 25,060 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் ஆறு ஆண்டுகள் வரை செயலில் இருக்கும்.
ஏற்றுமதியை மலிவானதாக்குதல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களை (MSME) ஆதரித்தல், வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் இந்தியாவின் உலகளாவிய ஏற்றுமதி போட்டித் தன்மையை மேம்படுத்தச் செய்தல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.