TNPSC Thervupettagam

புதிய சிறுகண் காலிலி இனங்கள்

January 27 , 2026 10 hrs 0 min 19 0
  • மகாராஷ்டிராவின் வடக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் ஜெஜினோஃபிஸ் வால்மீகி என்ற புதிய சிறுகண் காலிலி இனத்தை இந்திய அறிவியலாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
  • இந்த இனம் முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள வால்மீகி பீடபூமியில் பதிவு செய்யப்பட்டது.
  • சிறுகண் காலிலிகள், கைகால்கள் இல்லாத நிலத்தடி வாழ் இரு வாழ்விகள், அவை தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை நிலத்தடியில் செலவிடுகின்றன என்பதோடு மேலும் அவை பெரும்பாலும் மண்புழுக்கள் என்று தவறாகக் கருதப்படுகின்றன.
  • இதன் கண்டுபிடிப்பு இடத்திற்கு அருகிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மகரிஷி வால்மீகி மந்திரின் பெயரால் இந்த இனத்திற்கு இப்பெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்