TNPSC Thervupettagam

புதிய சீருடை விதி - இந்திய ராணுவம்

June 21 , 2026 16 hrs 0 min 38 0
  • இந்திய ராணுவம் 174 பக்கங்கள் கொண்ட ராணுவ சீருடைகள்-2026 கையேட்டை வெளியிட்டுள்ளதுடன் இது எட்டு ஆண்டுகளில் ஆடை விதிமுறைகளில் மேற்கொள்ளப் பட்ட முதல் விரிவான மாற்றத்தைக் குறிக்கிறது.
  • இந்தப் புதிய கையேடானது முறையான உடைகள், சடங்கு உடைகள், குளிர்கால வேலை உடைகள், சீர்படுத்தும் தரநிலைகள் மற்றும் பெண் அதிகாரிகளுக்கான ஆடை விருப்பங்களை உள்ளடக்கியது.
  • இந்திய ராணுவ அதிகாரிகளுக்கான முறையான சிவில் ஆடையாக உள்நாட்டு பண்டி மேலங்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஒரு புதிய போர் மேலங்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது 2029 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஜெர்சி அடிப்படையிலான குளிர்கால சீருடையான Dress 3A-ஐ படிப்படியாக மாற்றும்.
  • இந்தக் கையேடு அதிகாரப்பூர்வ பயன்பாட்டிலிருந்து "ராயல் / அரசுரிமை வாய்ந்த" உள்ளிட்ட காலனித்துவ காலத்திய பல சொற்களை நீக்குகிறது.
  • புதிய விதிகள் தீவிரமான சிகை அலங்காரங்கள், அங்கீகரிக்கப்படாத தாடிகள், வெளிப்படையாகத் தெரியும் மின்னணு சாதனங்கள், பச்சை குத்துதல் மற்றும் உடல் துளையிடுதல் ஆகியவற்றைத் தடை செய்கின்றன; மேலும் சீக்கிய வீரர்களுக்கு மட்டும் இதிலிருந்து குறிப்பிட்ட விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்