TNPSC Thervupettagam

புதிய டிஜிட்டல் ஷெங்கன் நுழைவு இசைவுச் சீட்டு முறை

August 6 , 2025 15 days 54 0
  • ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆனது பாரம்பரிய ஷெங்கன் நுழைவு இசைவுச் சீட்டு ஒட்டு முத்திரைகளுக்குப் பதிலாக இரு பரிமாண (2D) பட்டைக் குறியீடு எனப்படும் பாதுகாப்பான டிஜிட்டல் வழி பட்டைக் குறியீட்டினை அறிமுகப்படுத்த உள்ளது.
  • இந்தியப் பயணிகள் ஆவணங்களைப் பதிவேற்றுதல், நுழைவு இசைவுச் சீட்டுக் கட்டணங்களை செலுத்துதல், அதன் அங்கீகார நிலையைக் கண்காணித்தல் மூலம் முழுமையாக இயங்கலையில் விண்ணப்பித்து மின்னணு வழியில் கையொப்பமிடப் பட்ட நுழைவு இசைவுச் சீட்டினைப் பெறலாம்.
  • முதல் முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே நேரடி உயிரியளவியல் அம்சங்களின் சமர்ப்பிப்பு தேவைப்படும், ஆனால் அடிக்கடி பயணிப்பவர்கள் மிகவும் விரைவான செயலாக்கத்தின் மூலம் பயனடைவார்கள்.
  • கைரேகை மற்றும் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தும் நுழைவு - வெளியேற்ற அமைப்பு (EES) 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கடவுச்சீட்டு முத்திரைகளுக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படும்.
  • நுழைவு இசைவுச் சீட்டு விலக்கு பெற்றப் பயணிகளுக்கான ஐரோப்பிய பயண தகவல் மற்றும் அங்கீகார அமைப்பு (ETIAS) 2026 ஆம் ஆண்டிற்குள் தொடங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்