TNPSC Thervupettagam

புதிய தனித்த தேனீ இனங்கள்

July 23 , 2026 5 days 97 0
  • அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அறக்கட்டளையின் (ATREE) ஆராய்ச்சியாளர்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் பள்ளத்தாக்கில் இரண்டு புதிய தனித்த தேனீ இனங்களைக் கண்டுபிடித்தனர்.
  • இந்த இனங்கள் எலாஃப்ரோபோடா ட்ரையாங்குலேட்டா, அதன் முக்கோண வயிற்று அடையாளங்களால் பெயரிடப்பட்டது, மற்றும் ஆதி பழங்குடி சமூகத்தின் நினைவாக பெயரிடப்பட்ட ஹப்ரோபோடா ஆதி ஆகும்.
  • இரண்டு இனங்களும் தற்போது ஆண் மாதிரிகள் மூலம் மட்டுமே அறியப்படுகின்றன, என்ற நிலையில் இது இக்கண்டுபிடிப்பை அறிவியல் பூர்வமாக குறிப்பிடத்தக்கதாக ஆக்குகிறது.
  • தனித்த தேனீக்கள் முக்கியமான மகரந்தச் சேர்க்கையாளர்கள் ஆகும் என்ற நிலையில் அவை தனியாகக் கூடு கட்டுகின்றன (கூட்டாக வாழும் தேனீக்கள் போல அல்லாமல்) மற்றும் பல்லுயிரியலைப் பேணுவதிலும் விவசாயத்தை ஆதரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்