தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் புதிய அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் மற்றும் பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
ஐந்து ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் பெண்கள் தொழில்முனைவோராக மாறுவதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு பெண்கள் தொழில்முனைவோர் அதிகாரமளிப்புத் திட்டம் (TWEES) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறையால் தொடங்கப் பட்டது.
நகர்ப்புற மேம்பாட்டிற்காக திருச்சிராப்பள்ளி முழுமைத் திட்டம் 2045 மற்றும் தூத்துக்குடி முழுமைத் திட்டம் 2045 ஆகியவற்றை அரசாங்கம் வெளியிட்டது.
பிச்சாவரத்தில் சதுப்புநில பாதுகாப்பு மையம், மரக்காணத்தில் சர்வதேச இடம் பெயர்வு பறவை மையம் மற்றும் கோயம்புத்தூரில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
மருத்துவ வசதிகள் (₹167 கோடி), 60,000 மெட்ரிக் டன் திறன் கொண்ட கிடங்கு அலகுகள் (₹78 கோடி) மற்றும் மீன்வள உள்கட்டமைப்பு (₹100 கோடி) உள்ளிட்ட புதிய உள் கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டன.
டாக்டர் A.J.T. ஜான்சிங் வனவிலங்கு பாதுகாப்பு விருது மறைந்த கால்நடை மருத்துவர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தியின் மகனுக்கு வழங்கப்பட்டது.
பெரியார்வாதி வி. ஆனைமுத்து மற்றும் எழுத்தாளர் ஈரோடு தமிழன்பன் ஆகியோரின் படைப்புகளை தமிழக அரசு தேசியமயமாக்கியது என்பதோடுமேலும் காப்புரிமைத் தொகை அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.
மேலும் முதலமைச்சர் 500 அரிய ஆன்மீக புத்தகங்களையும், B.R. அம்பேத்கரின் 73 படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டார்.