புதிய தேசிய நீர்க் கொள்கையை (National Water Policy - NWP) உருவாக்குவதற்காக 10 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் இறுதி செய்துள்ளது.
இந்தக் குழுவானது முன்னாள் திட்ட ஆணையத்தின் உறுப்பினரும் நீர்வள நிபுணருமான மிஹிர் ஷா என்பவரால் தலைமை தாங்கப்பட இருக்கின்றது.
தற்போது நடைமுறையில் உள்ள NWP ஆனது 2012 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. 1987க்குப் பிறகு இதுபோன்று உருவாக்கப்பட்ட மூன்றாவது கொள்கை இதுவாகும்.
மேலும் தேசிய நீர்ப் பயன்பாட்டுத் திறன் அமைப்பை நிறுவுவதற்கான திட்டங்களும் உள்ளன.