TNPSC Thervupettagam

புதிய தொழிலாளர் சட்ட விதிகள் - இந்தியா

July 2 , 2022 1108 days 772 0
  • இந்தியாவில் 4 புதிய தொழிலாளர் குறியீடுகளின் தொகுப்பு மத்திய அரசால் வெளியிடப் பட உள்ளது.
  • அவை 2022 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளன.
  • இந்த நான்கு தொழிலாளர் குறியீடுகளின் கீழ் உள்ள விதிகள் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தினால் இறுதி செய்யப்பட்டுள்ளன.
  • புதிய தொழிலாளர்க் குறியீட்டின் நான்கு விதிகள் ஊதியங்கள், தொழில்துறை உறவுகள், சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலை நிலைகள் ஆகியனவாகும்.
  • வழக்கமான வேலை நேரமானது தற்போதுள்ள 9 மணிநேரத்தில் இருந்து ஒரு நாளைக்கு 12 மணி நேரமாக மாற்றப்படும்.
  • ஒரு வாரத்தில் 3 கட்டாய விடுமுறைகளுடன் 4 நாட்கள் வேலை நாட்கள் என வரம்பிட வேண்டும்.
  • இதன் அர்த்தம் 48 மணி நேரமாக விதிக்கப்பட்டுள்ள வாரத்தின் மொத்த வேலை நேரம் ஆனது மாற்றப் படாது என்பதாகும்.
  • பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் ஆகியோரின் வருங்கால வைப்பு நிதிக்கானப் பங்களிப்புகள் அதிகரிப்பதால் ஊழியர்களின் சம்பளம் குறையும்.
  • வருங்கால வைப்பு நிதிப் பங்களிப்பு என்பது மொத்த ஊதியத்தில் 50 சதவீதமாக இருக்க வேண்டும்
  • முன்னதாக, விடுப்பு வேண்டுவதற்கு ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 240 வேலை நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது.
  • தற்போது இந்த வரம்பு 180 வேலை நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்