TNPSC Thervupettagam

புதிய பருவநிலை ஆளுமைத் தளங்கள்

September 20 , 2026 5 hrs 0 min 30 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று உலக ஓசோன் தினத்தில் மும்பையில் இந்திய நெட் ஜீரோ இணையதளம் (India Net Zero Portal) மற்றும் தேசிய பருவநிலை மாற்ற செயல்திட்ட (NAPCC) தகவல்பலகை ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.
  • இந்திய நெட் ஜீரோ இணையதளம் ஆனது இந்திய நிறுவனங்கள் தங்களது நிகர பூஜ்ஜிய (Net Zero) கடமைகளைத் தன்னார்வத்துடன் பதிவு செய்யவும், அதன் முன்னேற்றத்தை அறிக்கை செய்யவும் அனுமதிக்கிறது; ஸ்கோப் 1 மற்றும் ஸ்கோப் 2 உமிழ்வுகள் ஊக்குவிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் ஸ்கோப் 3 அறிக்கையிடல் தன்னார்வமானதாகும்.
  • 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட NAPCC-இன் கீழான இந்தியாவின் 8 தேசியப் பணிகளின் செயலாக்கம் மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணிக்க NAPCC தகவல் பலகை ஓர் ஒருங்கிணைந்த தளத்தை வழங்குகிறது.
  • 2070 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய (Net Zero) உமிழ்வை அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • இந்த 8 பணிகளில் தேசிய சூரிய சக்தி திட்டம், தேசிய நீர் திட்டம், பசுமை இந்தியாவுக்கான தேசிய திட்டம், நிலையான வேளாண்மைக்கான தேசிய திட்டம் மற்றும் பிற நான்கு பருவநிலைத் திட்டங்கள் அடங்கும்.
  • மாண்ட்ரீல் நெறிமுறை (1987) ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் குறிக்கும் வகையில் உலக ஓசோன் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 16 அன்று அனுசரிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்