TNPSC Thervupettagam

புதிய பள்ளிக் கல்விக் கொள்கை 2025

August 11 , 2025 15 hrs 0 min 54 0
  • தமிழ்நாடு முதலமைச்சர் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் தேதியன்று தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்விக் கொள்கையை வெளியிட்டார்.
  • இந்தக் கொள்கையானது, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியை மட்டுமே அனுமதித்து, இருமொழி கொள்கை முறையினை மீண்டும் வலியுறுத்துகிறது.
  • இது மனப்பாடம் செய்யும் கல்வி முறைக்குப் பதிலாக ஆக்கப்பூர்வமான கற்றலை ஊக்குவிப்பதோடு, கல்விக் கற்றலை உடல் பயிற்சியுடன் ஒருங்கிணைக்கிறது என்பதோடு மேலும், தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
  • 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட்ட நீதிபதி D. முருகேசன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டது.
  • கல்வியாண்டின் ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஒரு சிறார் ஐந்து வயதினை நிறைவு செய்தால் மட்டுமே, 1 ஆம் வகுப்பிலிருந்து முறையான பள்ளிப்படிப்பு தொடங்கும்.
  • இந்த ஆண்டு முதல் 11 ஆம் வகுப்புக்கான பொது/வாரியத் தேர்வு நீக்கப்பட்டுள்ளது என்பதோடு மேலும் நூறு சதவீத மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர வேண்டும் என்பதே இதன் குறிக்கோள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்