அமெரிக்க வெளியுறவுத்துறை தலைமையிலான பாக்ஸ் சிலிக்கா முன்னெடுப்பில் 2026 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்திலேயே இந்தியா முழு உறுப்பினராக இணைய உள்ளது.
பாக்ஸ் சிலிக்கா என்பது ஆற்றல் பாதுகாப்பு, முக்கியமான கனிமங்கள், குறைக் கடத்தி உற்பத்தி மற்றும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளை உள்ளடக்கிய ஒரு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் மீள்தன்மை கொண்ட உலகளாவிய தொழில்நுட்பச் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பலதரப்பு முன்னெடுப்பாகும்.
இந்த முன்னெடுப்பு உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் கட்டாய சார்புகளைக் குறைக்கவும், முக்கியமான பொருட்கள் அல்லது தொழில்நுட்பங்களுக்காக எந்தவொரு ஒற்றை நாட்டையும் அதிகமாக நம்புவதைத் தடுக்கவும் முயல்கிறது.
இதன் உறுப்பினர்களில் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், நெதர்லாந்து, ஐக்கியப் பேரரசு, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, தைவான், ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் OECD நாடுகள் அடங்கும்.
இந்த முன்னெடுப்பு பங்கேற்கும் நாடுகளிடையே மேம்பட்டத் தொழில்நுட்பங்கள், AI நிர்வாகம் மற்றும் விநியோகச் சங்கிலிப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.