₹3,070 கோடி மதிப்பிலான வணிகத் திறனைக் கொண்ட, உத்திசார் ரீதியாக முக்கியமான 405 பாதுகாப்பு உபகரணங்களை உள்ளடக்கிய 6-வது நேர்மறையான உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை (PIL) பாதுகாப்பு உற்பத்தித் துறை (DDP) அறிவித்து உள்ளது.
இதில் 389 உபகரணங்கள் பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்களுக்கானவை (DPSUs) மற்றும் 16 உபகரணங்கள் இந்தியக் கடலோரக் காவல்படைக்கானவை (ICG) ஆகும்.
இந்தப் பட்டியலில் Su-30MKI, இலகுரக போர் விமானம் (LCA), T-72, T-90 மற்றும் போர்க் கப்பல்களில் பயன்படுத்தப்படும் வரிசை மாற்றக்கூடிய அலகுகள் (LRU), துணை அமைப்புகள், உதிரிபாகங்கள், கூறுகளும் மற்றும் மூலப்பொருட்களும் அடங்கும்.
இந்த உபகரணங்கள் 'மேக்' நடைமுறைகள் மற்றும் உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) மூலம் உள்நாட்டுமயமாக்கப்படும், பின்னர் அவை இந்திய விற்பனையாளர்களிடமிருந்து, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் புத்தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும்.
இறக்குமதிப் பதிலீடு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்ட SRIJAN பாதுகாப்பு இணையதளத்தில் இதற்கான விவரங்கள் மற்றும் காலக்கெடு கிடைக்கின்றன.