மேகாலயாவில் சன்னா போய் என்ற புதிய வகை பாம்புத் தலை மீனை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது ரி-போய் மாவட்டத்தின் இயூமாவ்லாங் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு சிறிய மலை ஓடையில் கண்டறியப்பட்டது.
இந்த இனத்திற்கு, இப்பகுதியில் உள்ள காசி பழங்குடியினரின் பூர்வீகக் குழுவான போய் மக்களின் பெயரிடப்பட்டது.
சன்னா போய் ஆனது கிழக்கு இமயமலையில் அதிக பன்முகத் தன்மைக்குப் பெயர் பெற்ற பாம்புத் தலை மீன்களின் கச்சுவா குழுவைச் சேர்ந்தது.
இன வரலாறு (பைலோஜெனடிக்) பகுப்பாய்வு இந்த இனம் சன்னா பிபுலியின் சகோதரி இனம் என்பதைக் காட்டுகிறது என்ற நிலையில்இது இந்தியாவின் மொத்தம் பதிவு செய்யப்பட்ட சன்னா இனங்களின் எண்ணிக்கையை 26 ஆக உயர்த்தியுள்ளது.