பிரதமர் அலுவலகம் (PMO) அமைந்துள்ள புதிய வளாகம் ஆனது சேவா தீர்த் என்று அழைக்கப்படும்.
இது முன்னதாக மத்திய எழில்முற்ற மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் நிர்வாகப் பகுதி என்று அழைக்கப்பட்டது.
இந்த வளாகத்தில் அமைச்சரவை செயலகம், தேசிய பாதுகாப்புச் சபையின் செயலகம் மற்றும் உயர் மட்டப் பேச்சுவார்த்தைகளுக்கான இந்திய மாளிகை ஆகியவற்றின் அலுவலகங்களும் அடங்கும்.
இந்தப் பெயரிடல் ஆனது அதிகாரத்திலிருந்து சேவைக்கு மாறுவதை பிரதிபலிப்பதுடன், ஆளுகையை சட்டா (அதிகாரம்) அல்லாமல் சேவா (சேவை) என்று வலியுறுத்துகிறது.
இராஜ் பவன்களை லோக் பவன்களாகவும், இராஜ்பாதை கர்தவ்யா பாதையாகவும், பிரதமரின் குடியிருப்புச் சாலையை லோக் கல்யாண் மார்க்கமாகவும் மறு பெயரிடுவது சமீபத்திய பிற பெயரிடலில் அடங்கும்.