ரஷ்யாவின் கூட்டாட்சி மருத்துவ உயிரியல் நிறுவனம் (FMBA) ஆனது அதன் mRNA அடிப்படையிலான பெருங்குடல் புற்றுநோய் தடுப்பூசியின் மருத்துவப் பயன்பாட்டிற்கு முந்தைய சோதனைகளை அதிக செயல்திறன் மற்றும் பாதுகாப்புடன் நிறைவு செய்தது.
இந்தத் தடுப்பூசி பெருங்குடல் புற்றுநோயை இலக்காகக் கொண்டுள்ளது மற்றும் 60% முதல் 80% வரையிலான கட்டி குறைப்பு விகிதங்களை வழங்கியது.
பெருங்குடல் புற்றுநோய் ஆனது, பெருங்குடல் மற்றும் மலக்குடல் இரண்டையும் உள்ளடக்கியவற்றைப் பாதிக்கும் பெருங்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கப் படுகிறது.
இது செரிமான அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் பெரிய குடலில் (பெருங்குடல்) தொடங்கும் ஒரு வகைப் புற்றுநோயாகும்.