TNPSC Thervupettagam

புதிய பொதுத் துறை தனியார்மயமாக்கல் கொள்கை

May 24 , 2020 1911 days 778 0
  • புதிய பொதுத் துறைக் கொள்கையானது பொதுத் துறைகளை மூலோபாய மற்றும் மூலோபாயமற்றவை என வகைப்படுத்தும்.
  • மூலோபாயத் துறைகளில் உள்ள மத்தியப் பொதுத் துறை நிறுவனங்களில் அதிகபட்சம் நான்கு மற்றும் குறைந்தபட்சம் ஒன்று என்ற அளவில் அரசாங்கம் அதைத் தக்க வைத்துக் கொள்ளும்.
  • மூலோபாயமற்ற துறைகளில் உள்ள மற்ற அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும் ஒன்று தனியார்மயமாக்கப் படும் அல்லது ஒன்றிணைக்கப்படும் அல்லது அதனை வைத்திருக்கும் தலைமை நிறுவனங்களின் கீழ் அவை கொண்டு வரப்படும்.
  • இது மத்திய அரசின் நிர்வாகச் செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்தியாவில் மூலோபாயத் துறை பொதுத் துறை நிறுவனங்கள் பின்வருமாறு
    • பாதுகாப்பு உபகரணங்களுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள்
    • பாதுகாப்பு விமானம் மற்றும் போர்க் கப்பல்கள்
    • அணு ஆற்றல்
    • விவசாயம், மருத்துவம் மற்றும் மூலோபாயமற்றத் தொழில்துறைக்கு வேண்டிய  கதிர்வீச்சின் பயன்பாடுகள்
    • இரயில் துறை
  • மத்திய அரசின் 51% பங்குகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் பொதுத் துறை நிறுவனங்களாக அறியப் படுகின்றன.
  • தனியார்மயமாக்கல் என்பது உரிமை, மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டை மாற்றுவதின் மூலம், அந்தத் துறைகளைப் பொதுத் துறையிடமிருந்து தனியார் துறைக்கு மாற்றுவதாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்