TNPSC Thervupettagam

புதிய மனநலப் பாதுகாப்பு விதிமுறைகள் 2026

September 17 , 2026 4 days 79 0
  • தமிழ்நாடு மாநில மனநலப் பாதுகாப்பு விதிமுறைகள், 2026-ஐ தமிழ்நாடு அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
  • இந்த விதிமுறைகள் மனநலக் காப்பகங்களில் உள்கட்டமைப்பு, பணியாளர்கள், தொழில் முறை தகுதிகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச தரங்களை நிர்ணயிக்கின்றன.
  • மனநலக் காப்பகங்கள் மனநலப் பிரிவுகள், போதை மீட்பு மையங்கள் மற்றும் உளவியல் மறுவாழ்வு மையங்கள் உட்பட ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தப் பட்டு ள்ளன.
  • உடனடி பாதிப்பைத் தடுக்க மட்டுமே உடல்ரீதியான கட்டுப்பாடு அனுமதிக்கப் படுகிறது மற்றும் அதற்கு மனநல மருத்துவரின் ஒப்புதல் பெறப்பட்டு முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
  • குடும்பத்தினர் வருகை, தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் நோயாளிகளுக்கான குறைகேட்பு பொறிமுறை ஆகியவற்றுக்கு இவ்விதிகள் வகை செய்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்