TNPSC Thervupettagam

புதிய மின்னணு முறையிலான முன்னெடுப்புகள் - ஹரியானா

December 30 , 2019 2432 days 991 0
  • ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு புதிய மின்னணு முறையிலான 5 முன்னெடுப்புகளைத் தொடங்கி வைத்தார்.
  • 2020 ஆம் ஆண்டானது  “சுசாஷன் சங்கல்ப் வர்ஷ்” என்று அனுசரிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டங்களுக்கான சீர்திருத்தங்கள் அந்த மாநில மக்களிடமிருந்துப் பெறப்பட இருக்கின்றன.
  • கிராமப்புற மற்றும் வாழ்விடப் பகுதிகளில் ‘சிர்சி கிராமம்’ என்ற சோதனை அடிப்படையிலான திட்டம் நிறைவடைந்து உள்ளதுடன், சிர்சி பணிகளின் கள சரிபார்ப்பும் செய்யப் பட்டுள்ளது. இதனால் இந்தக் கிராமமானது மாநிலத்தின் முதல் “விவசாய நிலமல்லாத வாழ்விடப் பகுதிகளைக் கொண்ட” கிராமமாக உருவெடுத்து உள்ளது.
  • சரல் வலைதளத்தில் கூடுதலாக தற்போது 42 சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தக் கூடுதல் சேவைகளுடன், இந்த வலைதளத்தில் உள்ள மொத்த சேவைகளின் எண்ணிக்கையானது தற்போது 527ஐ எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்