புதிய முத்திரைச் சின்னம் மற்றும் உருவச் சின்னம் “சாங்க்யிகி”
January 5 , 2026 3 days 82 0
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) ஆனது ஒரு புதிய முத்திரைச் சின்னம் மற்றும் உருவச் சின்னத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய உருவச் சின்னமானது “மேம்பாட்டிற்கான தரவு” என்ற கருத்துருவினை அடிப்படையாகக் கொண்டது.
இந்த உருவச் சின்னத்தில் அசோக சக்கரம், ரூபாய் (₹) சின்னம் மற்றும் மேம்பாட்டில் புள்ளி விவரங்களின் பங்கைக் காட்டும் வளர்ச்சிப் பட்டைகள் உள்ளன.
MoSPI ஆனது, அதன் உருவச் சின்னத்தை “சாங்க்யிகி” (புள்ளி விவரம் என்று பொருள்) என்றும் அறிமுகப்படுத்தியது.
கணக்கெடுப்புகள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இந்தச் சின்னம் பயன்படுத்தப்படும்.
இந்த முன்னெடுப்பு ஆனது, தரவுகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்காக தேசியப் புள்ளிவிவர அலுவலகத்துடன் (NSO) இணைக்கப்பட்டுள்ளது.