உஸ்பெகிஸ்தான் புதிய மேம்பாட்டு வங்கியின் (NDB) 10-வது உறுப்பு நாடாகவும், மத்திய ஆசியாவிலிருந்து இதில் இணையும் முதல் நாடாகவும் இணைந்துள்ளது.
உள்கட்டமைப்பு மற்றும் நிலையான மேம்பாட்டுத் திட்டங்களுக்கான வளங்களைத் திரட்டுவதற்காக பிரிக்ஸ் நாடுகளால் 2015 ஆம் ஆண்டில் புதிய மேம்பாட்டு வங்கி (NDB) நிறுவப்பட்டது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை புதிய மேம்பாட்டு வங்கியின் நிறுவன உறுப்பு நாடுகளாகும்.
வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் அல்ஜீரியா ஆகியவை இதன் பிற உறுப்பு நாடுகளாகும்.
NDB-இன் தலைமையகம் ஷாங்காயில் அமைந்துள்ளது; இது தற்போதுள்ள பலதரப்பு மற்றும் பிராந்திய நிதி நிறுவனங்களின் முயற்சிகளுக்குத் துணைபுரிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.