குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரில் தனது அலுவலகத்தினைத் திறந்த முதல் பன்னாட்டு முகமை, புதிய மேம்பாட்டு வங்கியாகும் (New Development Bank).
இதன் இந்திய அலுவலகமானது மிகப் பொருத்தமான திட்டங்களை அடையாளம் காண்பதில் உதவி வழங்குவதோடு, வங்கிக்கான ஒரு சாத்தியமான நிதி வளத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்கும்.
மேலும் இந்த வங்கி, இந்தியாவிலுள்ள முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காக புதியதாகத் தொடங்கப்பட்ட தேசிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதி வங்கியுடன் கை கோர்க்க முயல்கிறது.