புதிய வனவிலங்கு டி.என்.ஏ பரிசோதனைப் பகுப்பாய்வு ஆய்வகம்
October 29 , 2021 1419 days 590 0
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் இந்தியாவின் முதலாவது மாநில அரசிற்குச் சொந்தமான வனவிலங்கு டி.என்.ஏ பரிசோதனைப் பகுப்பாய்வு ஆய்வகத்தினைத் திறந்து வைத்தார்.
இந்த ஆய்வகமானது மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பிராந்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் திறக்கப்பட்டது.
தற்போது டேஹ்ராடூன் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் 2 வனவிலங்கு டி.என்.ஏ பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.
இவை முழுவதும் மத்திய அரசிற்குச் சொந்தமானவை.
புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகமானது இந்தியாவில் மாநில அரசிற்குச் சொந்தமான முதல் ஆய்வகமாகும்.