TNPSC Thervupettagam

புதிய விமானப்படைத் தலைமைத் தளபதி - ஆர்.கே.எஸ் பதௌரியா

September 20 , 2019 2132 days 767 0
  • ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதௌரியா புதிய இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதியாக  நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மிகவும் மதிப்புமிக்க அதிகாரியான, பதௌரியா பிரான்சு நாட்டுடனான ரஃபேல் ஜெட் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் முக்கியப்  பங்கு வகித்தார்.
  • தற்போது விமானப் படையின் துணைத் தளபதியாக உள்ள இவர், தற்பொழுது தலைமைத் தளபதியாகப் பதவி வகிக்கும் பி.எஸ்.தனோவா செப்டம்பர் 30 ஆம் தேதி ஓய்வு பெற்ற பின்னர் விமானப் படையின் தலைமைத் தளபதி பதவியை ஏற்றுக் கொள்வார்.
  • பி.எஸ்.தனோவா ஓய்வு பெறும் அதே நாளில் பதௌரியாவும்  ஓய்வு பெறவிருந்தார்.
  • ஆனால் அவர் இப்போது மறுமுறை நியமிக்கப்படுவதால், அவர் மேலும் மூன்று வருட காலத்திற்கோ அல்லது 62 வயதை அடையும் வரையோ இந்தப்  பதவியை  வகிப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்