புதிய விமானப்படைத் தலைமைத் தளபதி - ஆர்.கே.எஸ் பதௌரியா
September 20 , 2019 2145 days 774 0
ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதௌரியா புதிய இந்திய விமானப்படைத்தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மிகவும் மதிப்புமிக்க அதிகாரியான, பதௌரியா பிரான்சு நாட்டுடனான ரஃபேல் ஜெட் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகித்தார்.
தற்போது விமானப் படையின் துணைத் தளபதியாக உள்ள இவர், தற்பொழுது தலைமைத் தளபதியாகப் பதவி வகிக்கும் பி.எஸ்.தனோவா செப்டம்பர் 30 ஆம் தேதி ஓய்வு பெற்ற பின்னர் விமானப் படையின் தலைமைத் தளபதி பதவியை ஏற்றுக் கொள்வார்.
பி.எஸ்.தனோவா ஓய்வு பெறும் அதே நாளில் பதௌரியாவும் ஓய்வு பெறவிருந்தார்.
ஆனால் அவர் இப்போது மறுமுறை நியமிக்கப்படுவதால், அவர் மேலும் மூன்று வருட காலத்திற்கோ அல்லது 62 வயதை அடையும் வரையோ இந்தப் பதவியை வகிப்பார்.