மக்களவை சமீபத்தில் புதுடெல்லி சர்வதேச நடுவர் தீர்ப்பாய மைய மசோதாவை நிறைவேற்றியிருக்கின்றது.
இது இந்தியாவை ஒரு சமரசப் பேச்சுவார்த்தைக்கான மையமாக மாற்றும் நோக்கில் புதுதில்லியில் ஒரு மறுசீரமைக்கப்பட்ட சர்வதேச நடுவர் தீர்ப்பாய மையத்தை ஏற்படுத்திட எண்ணுகிறது.
இந்த மசோதாவானது,
ஒரு நிறுவனமாக்கப்பட்ட சமரசப் பேச்சு வார்த்தை மையத்திற்காக ஒரு தனிச் சுதந்திரமுடைய மற்றும் தன்னாட்சி பெற்ற முறையை ஏற்படுத்தவும்,
மாற்றுவகை தீர்வுகளுக்கான சர்வதேச மையத்தின் உடைமைகளை கைப்பற்றி இடம் மாற்றிடவும் எண்ணுகின்றது.
புதுதில்லியின் சர்வதேச நடுவர் தீர்ப்பாய மையம் நீதிபதி B.N. ஸ்ரீ கிருஷ்ணா குழுவின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்த மையத்தின் பதவி சார்பான தலைவர் இந்தியாவின் தலைமை நீதிபதி ஆவார்.