புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தின் முதல்வரான V. நாராயணசாமி அவர்கள் தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
புதுச்சேரி ஒன்றியப் பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை (14 இடங்கள்) இழந்ததைத் தொடர்ந்து இந்த முடிவானது எடுக்கப் பட்டுள்ளது.
ஒரு தொடர் பதவி விலகல்களை அடுத்து, ஆளும் அரசின் உறுப்பினர்களின் எண்ணிக்கையானது 12 ஆகக் குறைந்தது.
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 2 சட்டமன்ற உறுப்பினர்களும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மேலும் 2 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி விலகினர்.