TNPSC Thervupettagam

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்

March 11 , 2026 14 hrs 0 min 20 0
  • புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு (PIL) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக புதுச்சேரி அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கை அனுப்பியுள்ளது.
  • பிரெஞ்சு ஆட்சியின் போது, 1954 ஆம் ஆண்டில் விடுதலை பெறுவதற்கு முன்னரே, இப்பகுதியில் அடிமட்ட ஜனநாயக நிர்வாகத்தை மேம்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மற்றும் நகராட்சிகள் உருவாக்கப்பட்டன.
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் 1968 ஆம் ஆண்டு வரை நடைபெற்றன என்ற நிலையில் அதன் பிறகு சுமார் 38 ஆண்டுகள் தேர்தல்கள் நிறுத்தப்பட்டன.
  • நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சனை எழுப்பப்பட்ட பிறகு, 2006 ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
  • இந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2011 ஆம் ஆண்டில் முடிவடைந்தது, அதன் பிறகு இந்த ஒன்றியப் பிரதேசத்தில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப் படவில்லை.
  • அரசியலமைப்பின் 243-K மற்றும் 243-ZA சரத்துகளின் கீழ் உருவாக்கப்பட்ட ஒன்றியப் பிரதேசங்களுக்கான பொது தேர்தல் ஆணையம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கான தேர்தல்களை நடத்துகிறது என்ற நிலையில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் லடாக் இப்பொதுத் தேர்தல் ஆணையத்தில் சேர்க்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்