மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புது தில்லி – காத்ரா ஆகியவற்றிற்கிடையேயான வந்தே பாரத் விரைவு இரயில் வண்டியை புது தில்லியில் துவக்கி வைத்தார்.
காத்ரா என்பது ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் ரேசி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும்.
இது ஜம்மு நகரத்திலிருந்து 42 கிலோ மீட்டர் தூரத்தில் வைஷ்ணவ தேவி என்ற புனித தளம் அமைந்திருக்கின்ற திரிகூடம் என்ற மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கின்றது.
இந்நகரத்தின் வழியாக பாணகங்கா நதி பாய்கின்றது.
மிகுதியான இந்து யாத்திரீகர்கள் வைஷ்ணவ தேவி கோயிலுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கின்ற வகையில் இந்த இரயில் சேவையானது சமயச் சுற்றுலாவிற்கு ஒரு உத்வேத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.