புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறன் புள்ளி விவரங்கள் அறிக்கை 2021
April 9 , 2021 1965 days 961 0
இந்த அறிக்கை சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்தினால் (IRENA – International Renewable Energy Agency) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, 2020 ஆம் ஆண்டில் உலகளவில் 260 GW புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளதாக கூறுகிறது.
காற்று மற்றும் சூரிய ஆற்றலின் 91% புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனுடன், 2020 ஆம் ஆண்டில் அதிகரிக்கப் பட்ட 80%க்கும் மேற்பட்ட அனைத்துப் புதிய மின்சார உற்பத்தித் திறன்களும் புதுப்பிக்கத்தக்க வகை ஆற்றலைச் சார்ந்தவை ஆகும்.
உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தையான சீனா கடந்த ஆண்டில் 136 GW திறன் என்ற அளவிற்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனை நிறுவி உள்ளது.
அமெரிக்காவானது 29 GW என்ற அளவிற்கு ஆற்றல் உற்பத்தித் திறனை நிறுவியுள்ளது.
உலகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறன் 30% ஆக உள்ளது.
2015 ஆம் ஆண்டு பாரீஸ் உடன்படிக்கையின் கீழ் ஒப்புக் கொண்டபடி, நீண்ட நாள் இலக்கினை அடையும் முயற்சியில் பல்வேறு நாடுகள் புதைபடிவ எரிபொருள்களிலிருந்துப் புதுப்பிக்கத்தக்க எரிபொருளுக்கு மாறி வருகின்றன.