TNPSC Thervupettagam

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கு 2030

July 29 , 2026 16 hrs 0 min 33 0
  • 2030-ஆம் ஆண்டுக்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடையும் பாதையில் இந்தியா உள்ளது.
  • 2030-ஆம் ஆண்டு காலக்கெடுவிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து 50% நிறுவப்பட்ட மின்சாரத் திறனை அடையும் தனது இலக்கை இந்தியா ஏற்கனவே அடைந்துள்ளது.
  • நாடு 297.36 ஜிகாவாட் புதைபடிவ எரிபொருள் அல்லாத மின்சாரத் திறனையும், 288.58 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனையும் நிறுவியுள்ளது.
  • சூரிய ஆற்றல் 162.15 ஜிகாவாட் உடன் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
  • அதனைத் தொடர்ந்து காற்றாலை ஆற்றல் 57.44 ஜிகாவாட், பெருமளவில் நீர்மின்சாரம் 52.06 ஜிகாவாட், உயிரி ஆற்றல் 11.75 ஜிகாவாட் மற்றும் சிறு அளவிலான நீர்மின்சாரம் 5.18 ஜிகாவாட் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
  • 2030-ஆம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து 500 ஜிகாவாட் நிறுவப்பட்ட மின்சாரத் திறனை அடையும் தனது இலக்கையும் இந்தியா சிறப்பாக அடைந்து வருகிறது.
  • மொத்தமாக நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் இந்தியா உலகளவில் 3வது இடத்தில் உள்ளது (சீனா, அமெரிக்காவிற்குப் பிறகு).
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றலை விரிவுபடுத்துவதில் உள்ள முக்கிய சவால்களில் நிலம் கையகப்படுத்துதல், மின் பரிமாற்ற உள்கட்டமைப்பு மற்றும் மின்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்