புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் மற்றும் திட்டங்கள்
November 3 , 2025 7 days 42 0
2021 ஆம் ஆண்டு முதல், தமிழ்நாட்டின் காற்றாலை மின் உற்பத்தித் துறை 5,700 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளது மற்றும் 816 மெகாவாட் அளவிலான கூடுதல் திறனை உற்பத்தி செய்துள்ளது.
600 மெகாவாட் அளவிலான புதிய காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கு கூடுதலாக 4,200 கோடி ரூபாய் திட்டமிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் சூரிய ஆற்றல் உற்பத்தித் துறை 6,736 மெகாவாட் திட்டங்களுக்காக 23,500 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளது.
39,000 கோடி ரூபாய் (5,700 மெகாவாட்) மதிப்புள்ள சூரிய சக்தி திட்டங்கள் மேல் நிலை ஒப்புதல் நிலைகளில் உள்ளன.
25,500 மெகாவாட்களுக்கு மேல் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனுடன் தமிழ்நாடு தேசிய அளவில் நான்காவது இடத்தில் உள்ளது.
11,500 மெகாவாட் அளவிலான நிறுவப்பட்ட காற்றாலை மின் உற்பத்தித் திறன் தமிழ்நாட்டினை இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இடம் பெறச் செய்தது.
2030 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து 50 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்ய மாநிலம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
தேசிய உறுதிப்பாடுகளுக்கு இணங்க, 2070 ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வினை 70 சதவீதம் குறைத்து நிகர சுழி நிலையை அடைய தமிழ்நாடு இலக்கு நிர்ணயித்துள்ளது.
2034–35 ஆம் ஆண்டிற்குள் திட்டமிடப்பட்ட மின் தேவையானது 20,700 மெகாவாட்டில் இருந்து 35,500 மெகாவாட்டாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குந்தாவில் 500 மெகாவாட் நீரேற்று புனல் மின்னாற்றல் சேமிப்பு நிலையம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
வெள்ளிமலையில் 1,100 மெகாவாட் மற்றும் ஆழியாரில் 2,400 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்திக்கு முன் செயலாக்க நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டின் கடற்கரையோரப் பகுதிகள் சிறப்பான காற்று வேகம் மற்றும் அதிக திறன் உருவாக்க காரணிகளுடன் 35 ஜிகாவாட் அளவிலான கடல் காற்று ஆற்றலைக் கொண்டுள்ளது.
தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் மற்றும் இந்தியா-டென்மார்க் பசுமை உத்திசார் கூட்டாண்மை ஆகியவை தமிழ்நாட்டின் கடற்கரையில் இந்தியாவின் முதல் கடல் காற்று திட்டத்தினை அமைக்கத் தயாராகி வருகின்றன.