புதுப்பிக்கப்பட்ட ஐயூசின் (IUCN) சிவப்புப் பட்டியல்
December 23 , 2020 1676 days 931 0
சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியமானது (IUCN - International Union for Conservation of Nature) அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனங்களின் மீதான தனது சிவப்புப் பட்டியலைப் புதுப்பித்துள்ளது.
தற்பொழுது IUCN சிவப்புப் பட்டியலில் கங்கை, அமேசான், சிந்து, ஐராவதி போன்ற நதிநீர் வகை நன்னீர் ஓங்கில் இனங்கள் “அழிந்து போகும் நிலையுடன் கூடிய அச்சுறுத்தல் நிலையில்” (threatened with extinction) வைக்கப் பட்டுள்ளன.
தற்பொழுது நன்னீர் ஓங்கில்கள் “தரவு போதாமை” என்ற நிலையிலிருந்து “அருகி வரும் இனங்கள்” என்ற நிலைக்கு நகர்ந்து கொண்டு இருக்கின்றன.