நிதி ஆயோக் அமைப்பானது, டெல்லியில் விஞ்ஞான் பவனில் "புதுமையான வேளாண் முறை" குறித்த தேசிய அளவிலான ஒரு பயிலரங்கத்தினை ஏற்பாடு செய்தது.
இந்தப் பயிலரங்கில், இயற்கை வேளாண்மை முறைகளின் அடிப்படைகள், அறிவியல் மற்றும் செயல்முறைகளைப் புரிந்து கொள்ள வேண்டியதன் ஒரு அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இயற்கை வேளாண்மையைப் படிப்படியாகப் பின்பற்றச் செய்வது குறித்தும் இந்தப் பயிலரங்கத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
கோவிட்-19 தொற்றுக் காலத்தின் போது நல்ல ஆரோக்கியம், சத்தான உணவு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி வழங்குதல் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்தது பற்றியும் இதில் சிறப்பித்துக் கூறப் பட்டது.
சிறந்த ஊட்டச்சத்து வழங்கீட்டினை உறுதியுடன் வழங்கச் செய்வதில் கால்நடைகள் மற்றும் பசுக்களின் முக்கியத்துவம் குறித்தும் இந்தப் பயிலரங்கத்தில் பேசப்பட்டது.
இயற்கை விவசாயத்தில் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலின் ஒரு முக்கியத்துவம் குறித்தும் இங்கு எடுத்துரைக்கப்பட்டது.