புதைபடிமம் சாரா எரிபொருள் மூலங்களிலிருந்து 40 சதவிகிதம் மின் உற்பத்தித் திறன்
December 5 , 2021 1621 days 572 0
இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையங்கள்அதன் 40% இலக்கை புதை படிமம் சாரா எரிபொருள் மூலங்களிலிருந்துத் தயாரித்துள்ளன.
CoP 21 மாநாட்டில் இந்தியா தனது தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்கீடுகளின் ஒரு பகுதியாக, 2030 ஆம் ஆண்டுக்குள் புதைபடிமம் சாரா எரிபொருட்களிலிருந்து 40%மின் உற்பத்தித் திறனை அமைக்கும் இலக்கை எட்டுவதற்கு இந்தியா உறுதியளித்தது.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இந்தியா தனது இலக்கை எட்டியுள்ளது.
இந்தியாவில் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் 150.05 GW ஆகும்.
அணுசக்தி சார்ந்த மின் உற்பத்தி திறன் 6.78 GW ஆகும்.
இது புதைபடிமம் சாரா எரிபொருள் அடிப்படையில் நிறுவப்பட்ட மொத்த ஆற்றல் திறனை 156.83 GW ஆக திரட்டியுள்ளது.
இது நிறுவப்பட்ட மொத்த மின் உற்பத்தித் திறனான 390.8 GW அளவில் 40.1%ஆகும்.