இன்வெஸ்ட் இந்தியா நிறுவனத்திற்கு 2021 ஆம் ஆண்டிற்கான உலகின் புத்தாக்க ஊக்குவிப்பு நிறுவனம் எனும் ஒரு பெருமை ‘OCO குளோபல்’ என்ற நிறுவனத்தால் வழங்கப் பட்டுள்ளது.
இன்வெஸ்ட் இந்தியா நிறுவனமானது இந்திய தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் செயலாக்க நிறுவனம் ஆகும்.
இது 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் கீழ் ஓர் இலாப நோக்கமில்லா அமைப்பாக நிறுவப் பட்டது.
இந்தியா முழுவதும் நிலையான முதலீடுகளைச் செயல்படுத்துவதற்கான புதிய கூட்டிணைவுகளைக் கண்டறிந்து அதனை மேம்படுத்துவதில் உதவும் துறைசார்ந்த முதலீடுகளில் இது ஈடுபாடு செலுத்துகிறது.