TNPSC Thervupettagam

புத்தாக்கச் சாதனைகள் மீதான கல்வி நிறுவனங்கள் குறித்த அடல் தர வரிசை

August 25 , 2020 1729 days 637 0
  • 2020 ஆம் ஆண்டின் புத்தாக்க சாதனைகள் மீதான கல்வி நிறுவனங்கள் குறித்த அடல் தரவரிசையானது (ARIIA - Atal Ranking of Institutions on Innovation Achievements) கல்வி நிறுவனங்களை 2 பெரும் பிரிவுகள் மற்றும் 6 துணைப் பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ளது.  
  • ARIIA-ன் நோக்கம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தாக்கம், தொழில்முனைவுத் திறன், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களைத் தரவரிசைப்படுத்துவதாகும்.
  • ARIIA என்பது ஏஐசிடிஇ மற்றும் கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவினால் செயல்படுத்தப்படும் மத்தியக் கல்வித் துறை அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.

வகை

முதல் 2 வெற்றியாளர்கள்

மத்திய அரசினால் நிதி அளிக்கப்படும் நிறுவனங்கள்

      ஐஐடி – மதராஸ்

      ஐஐடி – மும்பை

      ஐஐடி – தில்லி

மகளிர் (உயர் கல்வி நிறுவனங்கள் மட்டும்)

   பெண்களுக்கான மனை அறிவியல் மற்றும் உயர்கல்விக்கான அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம்

 பெண்களுக்கான இந்திரா காந்தி தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

தனியார் கல்வி நிறுவனங்கள்

S.R. பொறியியல் கல்லூரி, தெலுங்கானா

G.H. ராய்சோனி பொறியியல் கல்லூரி, நாக்பூர்

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தமிழ்நாடு

தனியார்/நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்

 கலிங்கா தொழில்துறைத் தொழில்நுட்ப மையம், ஒடிசா

 எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம்

 வேலூர் தொழில்நுட்ப மையம்

மாநில அரசினால் நிதி அளிக்கப் படும் தன்னாட்சிக் கல்வி நிறுவனங்கள்

  புனே பொறியியல் கல்லூரி, மகாராஷ்டிரா

  பிஇஎஸ் பொறியியல் கல்லூரி, கர்நாடகா

  கோயம்புத்தூர் தொழில்நுட்ப மையம்,         தமிழ்நாடு

மாநில அரசினால் நிதி அளிக்கப்படும் பல்கலைக் கழகங்கள்

 இரசாயன தொழிலநுட்ப மையம், மகாராஷ்டிரா

 பஞ்சாப் பல்கலைக்கழகம்

 சௌத்திரி சரண் சிங் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்