புத்தொழில் நிறுவனங்களுக்கான மாநில அளவிலான முகப்புப் பக்கம்
September 14 , 2025 60 days 99 0
புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்கங்களுக்கான மாநில அளவிலான முகப்புப் பக்கம் ஒன்றை உருவாக்க சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது Guidance Tamil Nadu முகமையுடன் உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இந்தத் தளமானது தமிழ்நாட்டின் புத்தொழில் நிறுவன சூழல் அமைப்பின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது மற்றும் பல்வேறு பங்குதாரர்களுக்குப் புத்தாக்கத் திறனை வெளிப்படுத்துகிறது.
Guidance Tamil Nadu என்பது முதலீட்டு ஊக்குவிப்புக்கான தமிழ்நாடு அரசின் முதன்மை நிறுவனமாகும்.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி, தமிழ்நாட்டில் சுமார் 19,000 புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இந்தப் புத்தொழில் நிறுவனங்கள் கூட்டாக 2.2 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன மற்றும் 1,20,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளன.
ஒவ்வொன்றும் 200 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட முதலீட்டை ஈர்த்துள்ள 45 புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன.
மாநிலத்தில் 228 செயலில் உள்ள தொழிற்காப்பு மையங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன என்பதோடு இது இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.