TNPSC Thervupettagam

புரட்சிகரமான புவிசார் வரைபடமாக்கல் நுட்பம்

December 9 , 2023 745 days 494 0
  • நாட்டின் முதன்மையான தேசிய ஆய்வு மற்றும் வரைபடமாக்கல் அமைப்பான இந்திய ஆய்வு அமைப்பானது (SoI), புவியிடஞ்சார்ந்தத் தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி இந்திய வரைபடமாக்கல் நிறுவனமான ஜெனிசிஸ் இன்டர்நேசனல் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
  • இந்தியாவில் முப்பரிமாண (3டி) எண்ணிம இரட்டை வரைபடமாக்கல் திட்டத்தை உருவாக்குவதற்காக SoI அமைப்புடன் பொது-தனியார் ஒப்பந்தத்தை ஏற்படுத்திய முதல் நிறுவனமாக ஜெனிசிஸ் மாறியது.
  • இது ஆத்மநிர்பர் பாரதத்தினை மேம்படுத்துவதை வலியுறுத்துகின்ற இந்தியாவின் 2022 ஆம் ஆண்டு தேசியப் புவியியல் கொள்கையுடன் ஒத்துப்போகிறது.
  • இந்தக் கூட்டாண்மை ஆனது, அதி துல்லியத் திறன் கொண்ட முப்பரிமாணத் தரவு, எண்ணிம வடிவ நிலப்பரப்பு மாதிரிகள் (DTM), எண்ணிம மேற்பரப்பு மாதிரிகள் (DSM) மற்றும் வடிவியல் ரீதியாக திறுத்தியமைக்கப்பட்ட செயற்கைக் கோள் புகைப்படம் (ஆர்த்தோ இமேஜரி) ஆகியவற்றைப் பயன்படுத்தி, இந்திய வரைபடக் கட்டமைப்பு முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்