புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
September 13 , 2018 2658 days 870 0
இந்தியா மற்றும் புரூணை தருசலாம் ஆகிய நாடுகளுக்கிடையேயான செயற்கைக் கோள் மற்றும் செலுத்து வாகனங்களுக்கான தொலைத் தொடர்பு கண்காணிப்பு மற்றும் தொலைதூர கட்டளையிடும் நிலையங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றின் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இரு நாடுகளுக்கிடையேயான விண்வெளி ஆராய்ச்சி, அறிவியல் மற்றும் பயன்பாடுகள் மீதான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா மற்றும் தென்-ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே அமைதியான பயன்பாடுகளுக்கான விண்வெளியைப் பயன்படுத்துதல் மற்றும் ஆய்வுப் பயணங்களில் ஒத்துழைப்பு மீதான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையே விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மீதான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவையானது அமராவதி, விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம்; போபால், மத்தியப் பிரதேசம்; ஜோர்காத், அஸ்ஸாம்; குருஷேத்திரா, ஹரியானா ஆகிய இடங்களில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனங்களை தேசிய வடிவமைப்பு நிறுவனச் சட்டம் 2014-ன் வரம்பிற்குள் கொண்டுவரவும் இந்நிறுவனங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அறிவிக்கவும் தேசிய வடிவமைப்பு நிறுவன (National Institutes of Design) திருத்தச் சட்டம் - 2014ன் அறிமுகத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.