புற்றுநோய் சிகிச்சைக்காக அசாம் ஒரு புரோட்டான் சிகிச்சை இயந்திரத்தை வாங்க உள்ளது.
பொது சுகாதார அமைப்பில் புரோட்டான் சிகிச்சையை வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக அசாம் மாற உள்ளது.
புரோட்டான் சிகிச்சை இயந்திரத்தின் மதிப்பிடப் பட்ட செலவினம் 500 கோடி ரூபாய் ஆகும்.
புரோட்டான் சிகிச்சை என்பது ஊடு கதிர்களுக்குப் பதிலாக புரோட்டான் கற்றைகளைப் பயன்படுத்தும் ஒரு மேம்பட்ட கதிரியக்க சிகிச்சையாகும்.
தற்போது, இந்தியாவில் புரோட்டான் சிகிச்சை மையங்கள் தனியார் மருத்துவ மனைகளில் மட்டுமே கிடைக்கின்றன.
இந்த முன்னெடுப்பு மேம்படுத்தப் பட்ட புற்றுநோய்ப் பராமரிப்பை மேம்படுத்தச் செய்வதையும் இதற்காக வடகிழக்குப் பிராந்தியத்திற்கு வெளியே நோயாளிகளின் பயணத்தைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.