புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்கான உலக தினம் - ஜனவரி 30
January 31 , 2023 974 days 749 0
உலக சுகாதாரச் சபையானது, 2021 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதியன்று, ஜனவரி 30 தேதியினைப் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்கான உலக தினமாக அங்கீகரித்தது.
உலகெங்கிலும் உள்ள ஏழை மக்கள் மீது இந்த நோய்கள் ஏற்படுத்தும் பேரழிவு மிக்க தாக்கம் பற்றிய சிறந்த விழிப்புணர்வை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இந்நோய்களைக் கட்டுப்படுத்துதல், நீக்குதல் மற்றும் ஒழித்தல் ஆகியவற்றுக்கான வளர்ந்து வரும் நடவடிக்கைகளை ஆதரிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு ஒன்றை விடுக்கும் விதமாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் என்பது, 20 நோய்களின் மாறுபட்ட வடிவங்களின் குழுவாகும் என்பதோடு, அவை பெரும்பாலும் வெப்பமண்டலப் பகுதிகளில் பரவலாக காணப்படுகின்றன.
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியமானது உலகளவில் இரண்டாவது அதிக அளவில் புறக்கணிக்கப் பட்ட வெப்பமண்டல நோய்கள் பதிவினைக் கொண்டுள்ளது.
புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் என்பது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள வளர்ந்து வரும் பகுதிகளில் உள்ள விளிம்பு நிலைச் சமூகங்களிடையே மிகவும் பொதுவாக காணப்படும் தொற்றுநோய்களின் குழு ஆகும்.
அவை வைரஸ்கள், பாக்டீரியாக்கள், புரோட்டோசோவா மற்றும் ஒட்டுண்ணிப் புழுக்கள் போன்ற பல்வேறு நோய்க் கிருமிகளால் ஏற்படுகின்றன.