TNPSC Thervupettagam

புற்றுநோய் நோய் குறித்த பாராளுமன்றக் குழு

August 26 , 2025 9 days 44 0
  • அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் புற்றுநோயை ஒரு அறிவிக்கத் தக்க நோயாக அறிவிக்குமாறு பாராளுமன்றக் குழுவானது பரிந்துரைத்து உள்ளது.
  • தற்போது, ​​தேசியப் புற்றுநோய் பதிவுத் திட்டம் (NCRP) ஆனது இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 18% பேரை மட்டுமே உள்ளடக்கியதாக உள்ளது.
  • புற்றுநோயை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிப்பது நிகழ்நேர அறிக்கையிடலை மேம்படுத்தும், இலக்கு சார்ந்த நடவடிக்கைகளை ஆதரிக்கும் மற்றும் சான்றுகள் சார்ந்த கொள்கை வகுப்பைச் செயல்படுத்தும்.
  • புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நலச் சேவைக்கு நிதியளிப்பதற்காக புகையிலை பொருட்களுக்கு அதிக ஆபத்துள்ளப் பொருட்களுக்கான வீத வரி அல்லது அதிக வரி விதிக்கவும் குழு முன்மொழிந்தது.
  • வாய் சார்ந்த புற்றுநோய் ஆனது ஆண்டுதோறும் 60,000க்கும் மேற்பட்ட புதியதானப் பாதிப்புகளையும், ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஐந்து உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்