TNPSC Thervupettagam

புற்றுநோய் பதிவேடு 2025

September 8 , 2025 15 hrs 0 min 35 0
  • 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் 15.6 லட்சம் புற்றுநோய்ப் பாதிப்புகளும் 8.74 லட்சம் புற்றுநோய் தொடர்பான உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
  • மொத்தப் பாதிப்பில் சுமார் 51.1 சதவீதம் பேர் பெண்கள், ஆனால் நாடு முழுவதுமான மொத்தப் புற்றுநோய் உயிரிழப்புகளில் பெண்களின் பங்கு 45 சதவீதம் மட்டுமே ஆகும்.
  • 14 பதிவுகளில், நுரையீரல் புற்றுநோயை விஞ்சி ஆண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோயாக வாய்வழிப் புற்றுநோய் மாறியது.
  • மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் பெண்களில் உள்ள அனைத்துப் புற்றுநோய்களிலும் 40 சதவீதமாக இருந்தன, ஐதராபாத்தில் 100,000 பேருக்கு 54 என்ற அதிக மார்பகப் புற்றுநோய் விகிதம் பதிவாகியுள்ளது.
  • ஆண்களில் 100,000 பேருக்கு 198.4 மற்றும் பெண்களில் 100,000 பேருக்கு 172.5 என்ற பாதிப்பு விகிதத்துடன், ஐஸ்வால் ஒட்டுமொத்தப் புற்றுநோய்ப் பாதிப்புகளில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது.
  • 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 43 மையங்களில் இருந்து பெறப் பட்ட புற்றுநோய்ப் பதிவேடு தரவுகள் அந்தக் காலக் கட்டத்தில் 7.08 லட்சம் பாதிப்புகளும், 2.06 லட்சம் உயிரிழப்புகளும் பதிவானதாக காட்டுகின்றன.
  • புகையிலைப் பயன்பாடு, மது, நெருப்பில் சுட்ட உணவுகள் மற்றும் ஹெலிகோபாக்டர் பைலோரி மற்றும் HPV (மனித பாப்பிலோமா வைரஸ்) போன்ற தொற்றுகள் போன்ற வாழ்க்கை முறைக் காரணிகளால் வடகிழக்கு மாநிலங்களில் அதிகப் புற்றுநோய்ப் பாதிப்பு விகிதங்கள் பதிவாகியுள்ளன.
  • ஸ்ரீநகரில், ஆண்களில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 100,000 பேருக்கு 39.5 ஆகவும், புரோஸ்டேட் புற்றுநோய் 100,000 பேருக்கு 12.7 ஆகவும் பதிவாகியுள்ளது.
  • ஐஸ்வாலில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் விகிதம் 100,000 பேருக்கு 27.1 ஆகவும், அகமதாபாத்தில் ஆண்களில் வாய் புற்றுநோய் 100,000 பேருக்கு 33.6 ஆகவும் இருந்தது.
  • மக்கள் தொகையில் 10 முதல் 18 சதவீதம் வரையிலான போக்குகளைக் கண்காணிக்கின்ற இந்தப் பதிவேடுகள் தற்போது 23 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் தரவுகளைக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்