புற்றுநோய் மருந்து உற்பத்திக்கு தாவர செல்களின் பயன்பாடு
January 9 , 2024 587 days 425 0
மண்டி மற்றும் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள், கேம்ப்டோதெசின் (CPT) எனப்படும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக தாவர செல்களில் வளர்சிதை மாற்றக் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நவீன கால மருத்துவ முறையின் மருந்து ஆனது நாதாபோடைட்ஸ் நிம்மோனியானா என்ற உள்நாட்டு, அழிந்து வரும் தாவரத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப் படுகிறது.
1 டன் கேம்ப்டோதெசின் தயாரிக்க சுமார் 1,000 டன் தாவரம் தேவைப்படுகிறது.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் ஆனது, இந்தத் தாவரத்தைச் செந்நிறப் பட்டியலில் சேர்த்துள்ளது.
கடந்தப் பத்தாண்டுகளில் மட்டும் இந்தத் தாவரங்களின் எண்ணிக்கையில் 20% சரிவு ஏற்பட்டுள்ளது.